பொள்ளாச்சி தாலுக்கா பொறியாளர்கள் சங்க உறுப்பினர்களால் 2014 ஆம் ஆண்டில், Engineers Friends Club எனும் Whatsapp குரூப்பாக இயங்கி வந்ததது இதன் மூலம், நாங்கள் மிகவும் பொறியாளர்களுக்கு தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பொறியாளர்களின் தொழில் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் பகிர்ந்து கொள்ள உதவியாக இருந்தது. எங்களுக்கு தீவிரமாகவும், முன்முயற்சியிலும் எங்கள் பணியில் உதவுகிறது. ஒவ்வொரு பொறியாளர்களிடமும் இந்த விஷயங்கள் நம்மை மேலும் வலுப்படுத்தி இணைத்தது. எனவே, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த ஊக்கத்தன்மையை வெளிப்படுத்த எண்ணினோம். எனவே இறுதியாக, தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் உருவானது.
தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் : கட்டிடத்துறை சார்ந்த நில அளவை நிர்ணயம் செய்யும் பொறியாளர்கள், வரைபட வரைவாளர், மனைப்பிரிவு அமைக்கும் பொறியாளர், கட்டிடம் கட்டும் பொறியாளர், வீடுகட்டி விற்கும் பொறியாளர், சாலைகள் போடும் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் கட்டிடத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், கட்டட வடிவமைப்பாளர், லேண்ட் ஸ்கோப் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் அரசு சார்ந்த பணியில் உள்ள கட்டிட பொறியாளர்கள் ஆகியோர்களால் ஒருங்கிணைந்து உருவாக்கிய அமைப்பு .
பொறியாளர் சொந்தங்களுக்கு வணக்கம்! நமது தமிழகத்தில் கட்டுமான துறை சார்ந்த பொறியாளர்களுக்கு என சங்கங்கள் பல உள்ளது. அதில் நாம் அனைவருமே உறுப்பினர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அடையாளத்தை வழங்க பொது முத்திரை, பொதுவான அடையாள அட்டை, பொதுவான உறுப்பினர் அட்டை மற்றும் வாகனங்களில் ஓட்டுவதற்கு ஸ்டிக்கர் போன்றவை வழங்க உள்ளோம்.
போலி பொறியாளர்களை களையெடுக்கவும், அவர்களிடம் நாம் பறி கொடுத்து வரும் தொழில் வாய்ப்புகளை திரும்ப பெறவும். தகுதியான பொறியாளர்களை அங்கீகரிக்கவும் நமது சங்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை இரு நிலைகளில் நடைபெறும். வலைத்தளம் மற்றும் நேரடியாக விண்ணப்ப படிவம். நிறைத்து அனுப்புதல் முறையில் நடைபெறும். சற்று கடினமான முறையெனினும் நமது உரிமையை தக்கவைக்க அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன்!